திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 12 மார்ச் 2020 (20:11 IST)

ரஜினி கருத்து குறித்து விமர்சிக்க விரும்பவில்லை: டி.டி.வி. தினகரன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருத்துக்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினியின் கருத்து குறித்து தான் விமர்சிக்க விரும்பவில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இன்று சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த டிடிவி தினகரன், ‘ரஜினிக்கு முதல்வர் ஆகும் ஆசை இல்லை என்ற ரஜினியின் கருத்து குறித்து தான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார்
 
மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில், தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் அதில் ஒன்று ஆர்கே நகர் என்றும் இன்னொன்று தென் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்
 
ஜெயலலிதாவை முதன்முதலாக எம்எல்ஏ ஆக்கிய ஆண்டிப்பட்டி தொகுதியாக கூட அது இருக்கலாம் என்றும் இருப்பினும் இரண்டாவது தொகுதி எது என்பதை முடிவு செய்யவில்லை என்றும் டிடிவிதினகரன் தெரிவித்தார்