வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (11:42 IST)

கட்சியைக் காப்பாற்ற தினகரன் போட்ட மாஸ்டர் பிளான் !

தேர்தலுக்குப் பிறகு சீட்டுக்கட்டு மாளிகைப் போல சரிந்து வரும் அமமுகவை காப்பாற்ற மாஸ்டர் பிளான் ஒன்றைப் போட்டுள்ளார் டிடிவி தினகரன்.

திமுக, அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக, மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. ஏற்கனவே தங்களது முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜியை திமுக தாரைவார்த்தது போல இப்போது தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய முக்கிய நிர்வாகிகளை இழந்துள்ளது. இதனால் அமமுக அரசியல் ரீதியாக நெருக்கடியில் உள்ளது. மேலும் இன்னும் சில இரண்டாம் கட்டத் தலைவர்களும் அமமுகவை விட்டு விலகும் முனைப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதெல்லாம் பார்க்கையில் அமமுக சசிகலா ஜெயிலில் இருந்து வெளியில் வரும் வரைக்கூட தாக்குப்பிடிக்காது என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தினகரன் ஒருப் பக்காவான திட்டத்தைத் தீட்டியுள்ளாராம். கட்சியின் முக்கியப் பதவிகள் மற்றும் பொறுப்புகளை 50 வயதிற்குக் குறைந்த இளைஞர்களுக்குக் கொடுக்க திட்டமிட்டுள்ள ஒரு சில முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க உள்ளாராம். கட்சியை நீண்டகால நோக்கில் சீரமைக்கவே இந்த முடிவு என அமமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.