வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 13 ஜூலை 2019 (16:40 IST)

சசிகலாவை தூக்கி எறிந்த போயஸ்: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்!

சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் பெயர் வாக்காளர் பெயர் பட்டயலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 
 
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோர் போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து வந்தனர். சசிகலா மற்றும் இளவரசிக்கு போயஸ்கார்டன் இல்ல முகவரியிலேயே வாக்காளர் பட்டயலில் பெயர் இருக்கும். 
 
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சசிகலா மற்றும் இளவரசி சிறைக்கு சென்றனர். எற்கனவே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது சசிகலா, இளவரசி ஆகியோர் போயஸ் கார்டன் இல்லத்தில் இல்லை என்பதால் அவர்க்லின் பெயர் நீக்கப்பட்டது. 
 
தற்போது போயஸ் கார்டன் இல்லத்தை அரசு நினைவகமாக மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருவதால், இடைத்தேர்தலில் இருந்தும் இவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.