தொடர்புடைய செய்திகள்
- சனிக்கிழமையானாலே கல்லா கட்டும் டாஸ்மாக்; இந்த வார நிலவரம்!
- தமிழக மாணவியுடன் லைவில் பேசிய பிரதமர் மோடி! – மன் கீ பாத் உரை!
- எவ்வளவு குளறுபடிகளைதான் தாங்குவது? – அதிமுக மீது ஸ்டாலின் ஆவேசம்!
- சசிகலா வந்ததும் அதிமுக, அமமுக இணையும்! – கார்த்திக் சிதம்பரம் கருத்து!
- மக்கள் கருத்தை கேட்காமல் திட்டங்கள் செயல்படுத்த சட்டம்!? – வலுக்கும் எதிர்ப்புகள்
இந்த மாதிரியான சட்டங்களை அனுமதிக்கவே கூடாது! – டிடிவி தினகரன் கண்டன அறிக்கை
மத்திய அரசின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க கோரி டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு உருவாக்கியுள்ள சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு – 2020க்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இந்த சட்டத்தால் இயற்கை வளம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் என பலர் கூறிவரும் நிலையில் இதன்மூலம் மக்களின் குரலை அடக்க மத்திய அரசு முயற்சிப்பதாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் “புதிய வரைவுப்படி புதிதாக தொழில் தொடங்கவரும் நிறுவனங்கள் சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு பெறாமலேயே தொழில் தொடங்கிவிட்டு பிறகு அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அனுமதியின்றி கட்டிட பணிகளை செய்வதற்கான வரம்பு 50 ஆயிரம் சதுர அடியிலிருந்து, 1,50,000 ஆயிரம் சதுர அடி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது. ராணுவ திட்டங்களுக்கான ஸ்ட்ரேட்டஜிக் முறைகளை தனியாருக்கு பயன்படுத்துவது உள்ளிட்டவற்றிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள டிடிவி தினகரன் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
