வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 26 ஜூலை 2020 (13:20 IST)

காளைகளை வாடகைக்கு எடுக்க பணமில்லை: மகள்களை வைத்து உழுத விவசாயி

மகள்களை வைத்து உழுத விவசாயி
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு விவசாயி தனது நிலத்தில் உழவுப் பணிக்கு தனது மகள்களை காளைகள் போல பயன்படுத்தி ஏர் உழுத காட்சி வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
ஆந்திர மாநிஅல்த்தில் சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி என்ற பகுதியில் உள்ள விவசாயி ஒருவர், உழவுப் பணிக்கு காளைகளை வாடகைக்கு எடுக்க பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். கொரோனா விடுமுறையில் வருமானம் இன்றி தவித்த இவர், எப்படியும் நிலத்தை உழுது, விவசாயம் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தார்.
 
இதன்பின் தனது வயதுக்கு வந்த இரண்டு மகள்களையே காளையாக பயன்படுத்தும் விபரீத முடிவை எடுத்துள்ளார்.  கொரோனா காலத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டதால் உழவுக்காக தனது மகள்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்த விவசாயி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 
 
இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் இந்த வீடீயோவை பார்த்த நடிகர் சோனுசூட், அந்த விவசாயிக்கு இரண்டு காளைமாடுகள் வாங்கி கொடுத்துள்ளதாகவும், மேலும் அவரது இரண்டு மகள்கள் படிப்பின் செலவையும் ஏற்று கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.