வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (11:02 IST)

அதிகாரத்தை பறிக்கும் திமுக அரசு... டிடிவி ஆதங்கம்!

முதலமைச்சர் தலையிட்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் பதிவு. 

 
இது குறித்து டிடிவி தினகரன் தனது சமுக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கூட்டுறவு சங்க தலைவர்களின் அதிகாரத்தைப் பறித்த திமுக அரசு, ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரத்திலும் கை வைத்துள்ளது கண்டனத்திற்குரியது. ஊராட்சி அளவில் முடிவு செய்து செயல்படுத்த வேண்டிய திட்டங்களையெல்லாம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளையும் (BDO) ஒன்றிய குழுத் தலைவர்களையும் வைத்துக் கொண்டு நடைமுறைப்படுத்துகிறார்கள்.
 
இதன்மூலம் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பஞ்சாயத் ராஜ் சட்டம் வழங்கிய அதிகாரம் பறிபோகிறது. அதிகாரிகளிடம் அதிகாரத்தைக் குவித்து மொத்தமாக ஆதாயம் பெற திமுகவினர்  துடிப்பது ஜனநாயகத்திற்கு புறம்பானது. இவ்விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.