1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (08:59 IST)

ஒரே நாளில் ரூ.268 உயர்ந்த சிலிண்டர் விலை! – மக்கள் அதிர்ச்சி!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து சென்னையில் வணிக சிலிண்டர் விலை வேகமாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்து வந்தது. 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடந்த நிலையில் கடந்த மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்து வந்தது. தேர்தல் முடிந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்குள் 9 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

தற்போது பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.2,119.50 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.268.50 விலை உயர்ந்து ரூ.2,406க்கு விற்பனையாகி வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50க்கு விற்பனையாகி வருகிறது. வணிக சிலிண்டர் விலையேற்றம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.