வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (09:36 IST)

அரசு டீலக்ஸ் பேருந்துகளில் பெண்களுக்கு தனி இருக்கை! – போக்குவரத்துத்துறை உத்தரவு!

தமிழக அரசின் நெடுந்தூர விரைவு பயண பேருந்துகளில் பெண்களுக்கு பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கி உத்தரவு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் உள்ளூர் பேருந்துகள், நகர, மாநகர பேருந்துகளில் பெண்களுக்கென தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டு “மகளிர்” என்று அந்த இருக்கைகளுக்கு மேலே ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது.

ஆனால் நெடுந்தூரம் பயணிக்கும் அரசின் குளிர்சாதன படுக்கை பேருந்துகள், குளிர்சாதனம் இல்லா படுக்கை கொண்ட பேருந்துகள் உள்ளிட்டவற்றில் பெண்களுக்கான இருக்கைகள் ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. தற்போது பெண்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு அவர்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை அறிவிப்பின்படி 1LB, 4LB ஆகிய படுக்கைகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பெண்கள் யாரும் பயணிக்காத பட்சத்தில் இந்த படுக்கைகளை பிறருக்கு ஒதுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.