செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

27 சுங்கச்சாவடிகளில் 40% சுங்கக்கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தமிழகத்திலுள்ள 27 சுங்கச்சாவடிகளில் 10% முதல் 40 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாடு முழுவதும் இன்று சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதும் இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே 
இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 27 சுங்கச்சாவடிகளில் 40 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நேற்று நள்ளிரவு முதல் இந்த கட்டணம் அமலுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் 
 
சுங்கக்கட்டணத்தை உடனடியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றன