வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (13:32 IST)

10 தொகுதிகளில் மூன்றாம் இடம் – கலக்கிய மக்கள் நீதி மய்யம் !

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலைப் பெற்று வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்புக்கட்சிகளான மாநிலக் கட்சிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக் கட்சிகள் 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தனித்துப் போட்டியிட்ட அமமுக, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் எந்த தொகுதியிலும் முன்னிலைப் பெற முடியவில்லை.

இந்நிலையில் முதல்முறையாக தேர்தலை சந்தித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்து நாம் தமிழர் மற்றும் அமமுக ஆகியக் கட்சிகளைப் பின்னுக்கு தள்ளியுள்ளது.