அதிமுக- பாஜக கூட்டணி 90 சதவீதம் உறுதி: அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த ஜெயானந்த் பேட்டி

VM| Last Modified சனி, 9 பிப்ரவரி 2019 (06:58 IST)
திவாகரன் மகன் ஜெயானந்த் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சென்னையில் நேற்று சந்தித்தார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை ஜெயானந்த் பேசினாரா என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க போவதாக தகவல்கள் பரவியதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஜெயானந்த், பிரபல தமிழ் இணைய ஊடகத்துக்கு இது தொடர்பாக. பேட்டி அளித்தார். அப்போது பேசிய ஜெயானந்த், "மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினேன். தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவரிடம் எடுத்துக் கூறினேன். தமிழக விவசாயிகள் பாதிப்படையும் வகையில் எந்தவொரு திட்டமும் நிறைவேற்றப்படாது என்று வாக்குறுதி அளித்தார். அதிமுக-பாஜக கூட்டணி அமைவது 90 சதவீதம் உறுதி ஆகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார். இதில் மேலும் படிக்கவும் :