1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Dhinakaran about jayalalithaa video

ஜெ. சிகிச்சை வீடியோ; அமைச்சர்களுக்கு தெரியும்; மௌனம் கலைத்த தினகரன்

டிடிவி தினகரன்
நேற்று வெளியான ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ குறித்து தற்போது டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.

 
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை நேற்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இதுகுறித்து தற்போது டிடிவி தினகரன் தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
 
வேட்பாளராக இருந்ததால் வீடியோ குறித்து பேசவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ இருப்பது அமைச்சர்கள் பலருக்கும் தெரியும். ஜெயலலிதா கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நவம்பர் மாதம் 2016ஆம் ஆண்டு சசிகலாவால் வீடியோ எடுக்கப்பட்டது. மார்ச் மாதம் இந்த வீடியோவை நான் வெற்றிவேலிடம் கொடுத்தேன்.
 
சசிகலா மீது கொலை பழி தொடர்ந்து சுமத்தப்பட்டதால் மனசு தாங்காமல் வீடியோவை வெளியிட்டதாக வெற்றிவேல் கூறினார். வீடியோவை வெளியிடுவது குறித்து வெற்றிவேல் என்னிடம் தெரிவிக்கவில்லை.   
அடுத்த கட்டுரையில்
மகிழ்ச்சியை வெளிப்படுத்த அநாகரீக டுவீட் செய்த உதயநிதி ஸ்டாலின்