1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2017 (17:20 IST)

ஆர்.கே.நகர் தேர்தல் ; முடிவிற்கு வந்த வாக்குப்பதிவு ; டோக்கனுக்கு மட்டுமே அனுமதி

சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் முடிவிற்கு வந்துள்ளது.

 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் இடைத்தேர்தல் இன்று காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஆர்.கே.நகர் பகுதியில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், மொத்தம் 258 வாக்குசாவடிகளிலும் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
 
மதியம் 1 மணி நிலவரப்படி 41.06 சதவீத வாக்குகள் பதிவானது. அதன் பின்பு ஆர்.கே.நகரில் மழை பெய்தது. ஆனாலும், பொதுமக்கள் பொறுமையுடன் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர்.
 
ஆனால், 5 மணி வரை மட்டுமே வாக்களிக்க  முடியும் என்பதால், 5 மணிக்கு முன் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மாலை 6 மணி வரை அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. அதே நேரம் பலரால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
 
தற்போது, வாக்காளர்கள் இல்லாத வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
வரும் ஞாயிறு (24.12.2017) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.