சுனாமி பேரலை; ஆழிக்கடலின் கோர சம்பவத்தின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம்
சுனாமி பேரலை தாக்கிய 15 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலை தாக்கி லட்சக்கணக்கான மக்கள் பேரலையால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இந்தியா, இலங்கை, உள்ளிட்ட நாடுகள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் குறிப்பாக நாகப்பட்டினம், கடலூர், சென்னை, கன்னியாகுமரி ஆகிய கடல் பகுதிகளில் பல்லாயிரக்கணகானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று 15 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அனுசரிக்கப்படுகிறது.