1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 19 ஜூன் 2024 (12:03 IST)

விடாமுயற்சியால் காங்கிரசை கட்டிக்காக்க முயற்சி.! ராகுல் காந்தியை புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜு..!!

Sellur Raju
தனது விடாமுயற்சியால் காங்கிரசை கட்டிக்காக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டியுள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராகுல்காந்திக்கு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள்  வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றும் ராகுல்காந்தி தனது விடா முயற்சியால் காங்கிரஸை கட்டிக் காக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றும் பாராட்டியுள்ளார். செல்லூர் ராஜூ சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்து, ''நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்'' எனப் பதிவிட்டிருந்தார்.


இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்  பாராட்டியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் எளிமையாக யார் இருந்தாலும் நான் பாராட்டுவேன் என்றும் விளக்கம் அளித்த செல்லூர் ராஜூ, ராகுல் காந்தி தொடர்பான வீடியோவை நீக்கினார். தற்போது ராகுல் காந்தியை மீண்டும் அவர் பாராட்டி இருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.