1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (13:14 IST)

என்டிஏ கூட்டணி ஆட்சி நீடிக்க போராட வேண்டும்.! ராகுல் காந்தி கருத்து..!!

Rahul Gandhi
பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிலைத்து நீடிக்க கடுமையாக போராட  வேண்டி இருக்கும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கூட்டணி ஆட்சி என்பதால், பாஜக அரசு விரைவில் கவிழும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
 
இந்நிலையில் ஆங்கிலம் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கடந்த 2014 மற்றும் 2019 ஆட்சி போல இந்த ஆட்சி அமையவில்லை என்று விமர்சித்தார்.
 
மத்தியில் தற்போது அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆட்சி சிறு பிரச்சினைகளுக்கே கவிழும் அபாயத்தில் உள்ளது என்றும். கூட்டணி கட்சிகள் ஓரணியில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

 
எனவே,  இந்த கட்சிகள் நிலையான ஆட்சியை தொடர செய்ய போராட்டமாக அமையும் என்று ராகுல் காந்தி கூறினார்.