புதன், 11 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2024 (17:40 IST)

நேற்று அமலாபால் வீட்டில் விசேஷம்.. இன்று ஏ.எல்.விஜய் வீட்டில் விசேஷம்.. ரசிகர்கள் வாழ்த்து..!

நேற்று நடிகை அமலா பால் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இன்று அவருடைய முன்னாள் கணவர் இயக்குனர் ஏ எல் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
நடிகை அமலா பால் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏஎல் விஜய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் மூன்றே வருடத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பின்னர் அமலா பால் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் கர்ப்பமானார். 
 
இந்த நிலையில் நேற்று அமலா பால் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
இந்த நிலையில் அமலாபாலை விவாகரத்து செய்த பின் மறுமணம் செய்து கொண்ட ஏஎல் விஜய்க்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அவர் தனது பிறந்த நாளை மனைவி மற்றும் குழந்தையுடன் கொண்டாடிய நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
அடுத்தடுத்த நாளில் அமலாபால் மற்றும் அவருடைய முன்னாள் கணவருக்கு விசேஷங்கள் ஏற்பட்டுள்ளது  ஆச்சரிய ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva