ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (22:35 IST)

மக்களை சிரிக்க வைத்த எனக்கு இந்த நிலைமை- பிரபல நடிகர் வேதனை!

ponda mani
மக்களும் முதல்வரும் என் உயிரைக் காக்க உதவி செய்ய வேண்டும் என பிரபல காமெடி நடிகர் போண்டாமணி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரபல காமெடி நடிகர் போண்டாமணி. வடிவேலு குழுவினரோடு இணைந்து பல படங்களில் நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தியவர். 

இவர் சமீபத்தில், இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்காக சிகிச்சை பெற்று வந்த  நிலையில், அவரது இரண்டு சிறு நீரகங்களும் செயலிழந்து விட்டதாக  நடிகர் பெஞ்சமின் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த  நிலையில், சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி, ஒரு பிரபல சேனலுக்குப் அவர்  பேட்டியளித்துள்ளார். அதில்,’’ ஒரு படத்தில்  நிஜ சாக்கடையில் குதித்ததால்தான்  முதலில் நுரையீரல் பாதிக்கப்பட்டு, அதன் பின் பல பிரச்சனைகளைச் சந்தித்ததாகவும்,தற்போது இரண்டு இரண்டு சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் சிரிக்க வைத்த எனக்கு இந்த  நிலைமை வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  சினிமாவில் நடித்த நான் இதுவரை எனக்கென்று ஒன்றும் சேர்த்திவைக்கவில்லை என்றும்,  எனக்கு மக்களும், முதல்வர் ஸ்டாலினும் உதவி செய்ய வேண்டுமென  போண்டாமணி வேதனையுடன் கூறியுள்ளார்.