1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Transport unions to go on strike from 9th

வரும் 9 ஆம் தேதி முதல் போக்குவரத்து சங்கங்கள் வேலைநிறுத்தம்

tnstc transport strike
தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி முதல் காலவரையற்ற  போராட்டத்தில் ஈடுபட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், போக்குவரத்து சங்கங்களுடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

வேலை நிறுத்த போராட்டத்தை அண்னா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தும் எனவும், ஏ.ஐ.டி.யு.சி. சி.ஐ.டி.யு சங்கங்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளன.

பழைய ஓய்வூதிய திட்டம்,  15வது ஊதிய ஒப்பந்ததை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இருமுறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
6 சிறந்த படைப்பாளிகளுக்கு 'கலைஞர் பொற்கிழி’ விருது- அமைச்சர் உதயநிதி