வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (18:34 IST)

பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை - உயர்நீதிமன்றம்

பால், பிஸ்கட் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்த விற்பனை செய்யத் தடையில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018  ஆம் ஆண்டு 14 பொருட்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்ட  நிலையில், உணவுப்பொருட்களை அடைக்கும் கவர்களுக்கு 2020 ல் தடைவிதித்ததையும் எதிர்த்து தமிழ் நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தன.

அதில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி வழங்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், அரசாணையை முழுமையாக அமல்படுத்துவதும் சாத்தியமில்லாததால் அதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில்  விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், அன்றாட உணவுப் பொருட்களை அடைக்க பயன்படுத்துவது பிளாஸ்டிக் கவர்களை தடை செய்யும் அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாதது. இதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பால், பிஸ்கட், எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.