1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 3 ஜனவரி 2024 (16:28 IST)

பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி

edapadi palanisamy
பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாட்டில் அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பணியாற்றி வருகின்றன.
 
தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக சமீபத்தில், பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. எனவே அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக மீது பல விமர்சனங்களை அதிமுக முன்வைத்து வரும் நிலையில், பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது:
 
தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. அதிமுக ஐடி பிரிவினர் எதற்காகவும், யாருக்காகவும் அஞ்ச வேண்டாம். சமூக வலைதளங்கள் வாயிலாக செயல்படும் அதிமுகவினர் யாரையும் மரியாதை குறைவாகவோ, நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்க கூடாது. அதிமுகவின் சாதனைகளையும், திமுக அரசு செய்த தவறுகளையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.