களத்தில் இறங்கிய அதிமுக அமைச்சர்: மக்களை ஈர்க்க திட்டமா??

anandakumar| Last Updated: சனி, 8 ஜூன் 2019 (20:07 IST)
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை அடுத்த நன்னியூரில் மக்களோடு மக்களாக டீ குடித்த செய்தி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் பல நாட்களாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.விஜயபாஸ்கர் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

இந்நிலையில் அமைச்சர் நேற்று கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை அடுத்த நன்னியூரில் மக்களை சந்திக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த தேனீர் கடைக்குள் சென்று அங்கு அமர்ந்து மக்களோடு மக்களாகத் தேனீர் அருந்தினார்.


தேனீர் அருந்திய பின்பு அந்த தேனீர் கடையிலுள்ள செய்தி தாள்களையும் வாசித்தார்.

பின்னர், அமைச்சர் எம்.விஜயபாஸ்கர் மக்களோடு மக்களாக தேனீர் அருந்திய செய்தி அந்தப்பகுதியில் காட்டு தீ போல் பரவியது. மேலும் மக்கள் இந்த சம்பவத்தை அறிந்து ஆச்சர்யமாக உணர்ந்தனர்.


இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் மக்களோடு மக்களாகச் சென்று தேனீர் அருந்திய செய்தி சுற்றுவட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 இதில் மேலும் படிக்கவும் :