ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 8 ஜூன் 2019 (19:08 IST)

கரூர் மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடல்

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் பொய்யாமொழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் பொய்யாமொழி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.அந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் தன்னார்வலர்கள் அந்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குளிரூட்டப்பட்ட அறைகளையும், ஸ்மார்ட் கிளாஸ் போன்ற வசதிகளையும் செய்து கொடுத்தனர்.இந்த செயல் சுற்றுவட்டாரங்களில் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.

மேலும் தன்னார்வலர்களின் இந்த செயலைப் பாராட்டும் விதமாக கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்குச் சென்று  நேரிலேயே தன்னார்வலர்களைப் பாராட்டினார்.

பின்பு அந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரோடு மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடலையும் நடத்தினார்.

 மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் உடன் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமி மற்றும் பொய்யாமொழி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை திருமதி முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.