அய்யர்மலை ரத்தினகீரீஸ்வரர் ஆலயத்தில் ரோப்கார் அமைப்பதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

karur
c. anandakumar| Last Updated: புதன், 22 மே 2019 (19:56 IST)
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் 1017 படிக்கட்டுகளை கொண்ட ரெத்தினகீரிஸ்வரர் திருக்கோவிலுக்கு பெரியோர்கள் மற்றும் சிறுகுழந்தைகள் பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் இந்த மலைக்கு நடக்க முடியாத பக்தர்களின் வசதிகளுக்காக புதியதாக கடந்த 2011ஆம் ஆண்டு அடிக்கல்நாட்டப்பட்டு தற்போது வரை மந்தமாக செயல்பட்டு வரும் பணியினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பணீந்திர ரெட்டி அவர்கள் ஆய்வு நடத்தினார். 
இணை  ஆணையர் சுதர்சன். உதவி ஆனையர் சூரிய நாராயணன். தலைமை பொறியாளர் அறம் ஆகியோருடன் அய்யர்மலை உச்சிக்கே சென்று பணிகள் குறித்து ஆய்வு நடத்தி விரைவாக பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :