திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 30 ஜூன் 2021 (08:27 IST)

நிறுத்தப்பட்ட பாம்பன் பால ரயில் போக்குவரத்து… சென்சார் செயலிழப்பால் ஏற்பட்ட சிக்கல்!

தமிழகத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நூற்றாண்டு கண்ட பாம்பன் பால ரயில் போக்குவரத்தில் ரயில்கள் செல்லும் போது தூக்கு பாலத்தில் அதிர்வுகள் ஏற்படுகிறதா என்று சோதனை செய்ய சென்னை ஐஐடி மூலமாக சென்சார் கருவிகள் 80 இடங்களில் பொருத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று ரயில் அந்த பாலத்தில் செல்லும் போது சென்ஸார் கருவி ஒன்று சத்தம் எழுப்பியுள்ளது. இதையடுத்து ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சென்சார் கருவிகள் சோதனை செய்யப்பட்டன. அதில் சென்சார் கருவி பழுதானதால் ஒலி எழுப்பியுள்ளது கண்டறியப்பட்டு அதற்கு பதிலாக மாற்று சென்சார் பொருத்தப்பட்டது. அதையடுத்து இன்றிலிருந்து மீண்டும் ரயில் பயணம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.