செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 10 ஆகஸ்ட் 2019 (14:44 IST)

மொழி பிரச்சனையால் நடுவழியில் நின்ற திருப்பதி ரயில்..

கடலூரில் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த ரயில், மொழி பிரச்சனை காரணமாக நடு வழியில் நின்றது.

மன்னார்குடி-திருப்பதி இடையே, வாரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வெள்ளிகிழமை காலை 8.40 மணியளவில் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து கம்மியப்பேட்டை நவநீதம் நகர் அருகே சென்றபோது, அங்குள்ள ரயில்வே கேட் திறந்தபடி இருந்தது.  மேலும் அதன் அருகே தண்டவாளத்தில் சிவப்புக் கொடி நடப்பட்டிருந்தது.

இதனால் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு ரயில்வே நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டு சிவப்பு கொடி அகற்றப்பட்டது. இது குறித்து கடலூர் ரயில்வே துறையினர் கூறியபோது, நிலை மேளாலருக்கு தமிழ் தெரியாததால் கேட் கீப்பருக்கு சரியான தகவல் சென்று சேரவில்லை என்பதால் தான் இவ்வாறு நடந்துள்ளது என கூறியுள்ளார்.

சமீபத்தில் இது போன்ற மொழி பிரச்சனையால் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோத பார்த்த சம்பவம் நடந்தது. இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.