ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (15:53 IST)

மெட்ரோ ரயில் பயணிகளுக்கான புதிய வசதி..!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு புதிய வசதி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை கவரும் விதமாக ரயில் நிலையங்களில் இருந்து 6 முதல் 8 கி.மீ. தூரத்திற்கு செல்லும் வகையில் வாடகை கார் வசதியை அறிமுகபடுத்தி உள்ளனர். ரூ.10 கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணிகள் இந்த வசதியை எளிதில் பெறலாம். மொபைல் ஆப் மூலம் செல்லும் வாடகை காரில், இடம், நேரம் மற்றும் சீட் வசதியை புக் செய்து கொள்ளலாம்.

இந்த வாடகை கார் வசதியை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த கார்கள் மின்சார பேட்டரி மூலம் இயங்கக்கூடியவை. மேலும் மெட்ரோ நிர்வாகமும், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனமும் இந்த வசதிகளை வழங்கியுள்ளனர். இந்த வசதி அனைத்து மெட்ரோ நிலையங்களுக்கும் 3 மாதங்களில் விரிவுப்படுத்தப்படும் என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.