கர்ப்பிணியை காப்பாற்ற ’ரயில்வே ’ பிளாட்பாரத்தில் ஆட்டோ ஒட்டிய நபர் மீது வழக்குப் பதிவு
மும்பையில் உள்ள பிரபல பிளாட்பாரத்தில் ஒரு கர்ப்பிணியை காப்பாற்ற, ரெயில்வே பிளாட்பார்த்தின் மீது ஆட்டோ ஓட்டியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள விரார் ரெயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று 7 மாதக் கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது கணவர் வந்தனர். அந்த சமயத்தில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு தீடீரென்று இடுப்பில் வலி ஏற்பட்டது.கணவர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். உடனே அருகில் நின்றிருக்கும் ஆட்டோ ஓட்டுநரிடம் உதவி கேட்டுள்ளார்.
பின்னர் அந்த ஆட்டோ ஓட்டுநரும் ரயில்வே நிலைய பிளாட்பாரத்தினுள் வந்து பெண்ணை ஏற்றிக்கொண்டு சஞ்சீவி மருத்துவமனைக்குச் சென்றார்.
இதையடுத்து அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் பிளாட்பாரத்தில் ஆட்டோ ஓட்டிய டரைவரை போலிஸார் அடையாளம் கண்டு அவரை கைது செய்தனர்.அதபின்னர் நீதிபதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.