1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (16:00 IST)

சீசன் டிக்கெட்டுகளை வைத்து 160 கி.மீ வரை ரயிலில் பயணிக்கலாம் – ரெயில்வே அறிவிப்பு

பாசஞ்சர் ரயில்களில் நாள்தோறும் பயணம் செய்பவர்கள் சீசன் டிக்கெட் பெற்றுக் கொண்டு பயணிப்பது வழக்கம். வழக்கமாக பயணம் செய்ய ஆகும் செலவை விட மாதம் ஒருமுறை சீசன் டிக்கெட் எடுத்து கொள்வது செலவை குறைக்கும் என்பதால், நாள்தோறும் வேலைக்கு செல்பவர்கள் சீசன் டிக்கெட் பெற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் சீசன் டிக்கெட்டுக்கான பயண தூரத்திற்கு எல்லை உள்ளது. அதிகபட்சம் 150 கி.மீ தொலைவு பயணிப்பதற்கு மட்டுமே சீசன் டிக்கெட் வாங்க முடியும். விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு நாள்தோறும் பலர் வேலைக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எழும்பூரில் இருந்து திண்டிவனம் வரை செல்ல மட்டுமே பாஸ் வழங்கப்படுகிறது. இதனால் திண்டிவனத்திற்கு பிறகு பேருந்துகளை நாடி செல்ல வேண்டிய பிரச்சினை மக்களுக்கு இருக்கிறது.

சீசன் டெக்கெட்டின் பயணதூரத்தை 160 கி.மீ என நீட்டிக்கும்படி பல பயணிகள் தெற்கு ரயில்வேக்கு கடிதங்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே சில வழித்தடங்களுக்கு மட்டும் சீசன் டிக்கெட்டுகளுக்கான தூரத்தை 160 கி.மீ-ஆக மாற்றியிருக்கிறார்கள்.

அதன்படி சென்னை மின்சார ரயில்களில் சென்னை செண்ட்ரலில் இருந்து ஆளந்தூர் வரை, எழும்பூர் முதல் குடியாத்தம் வரை செல்ல சீசன் டிக்கெட்டுகளின் தூரம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.

எழும்பூரிலிருந்து பூங்கா நகர் சென்று, அங்கிருந்து செண்ட்ரலுக்கு மாறி குடியாத்தம் செல்லவும் இந்த சீசன் டிக்கெட் தூர விதிமுறை பொருந்தும்.

இந்த அறிவிப்பினால் பல பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கூடவே தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா என விழுப்புரம் பயணிகள் நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.