திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (09:29 IST)

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவை நிறுத்தம் !!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்திற்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 
இன்று (வெள்ளிக்கிழமை) மின்சார ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து வந்துள்ள விரிவான தகவல் பின்வருமாறு... 
 
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.08, 10.56, 11.48 ஆகிய நேரங்களிலும் மதியம் 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 
 
மறுமார்க்கமாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே காலை 10.55, 11.30 மதியம் 12.20, 1.00, 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.