செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஜனவரி 2021 (17:17 IST)

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டார் ரோஹித் சர்மா: வைரல் புகைப்படம்!

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டார் ரோஹித் சர்மா
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது 
 
இதற்காக இந்திய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக சென்னைக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னைக்கு மனைவியுடன் வந்த ரோகித் சர்மா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக செய்தி வெளியானது. இதனை உறுதி செய்வதை போல் ரோஹித் சர்மா தனது மனைவியுடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மனைவியுடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக காயத்திலிருந்த ரோகித் சர்மா சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார் என்பது தெரிந்ததே