வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 28 ஜனவரி 2021 (16:17 IST)

ஜெ. நினைவிடம் குறித்து நறுக் பதில் அளித்த டிடிவி!!

சசிகலாவின் விடுதலையை அதிமுகவினரும் கொண்டாடுகின்றனர் என டிடிவி பேட்டி. 

 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியை காண தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் வருகை புரிந்தனர்.
 
இந்நிலையில் சசிகலாவை பார்ப்பதற்காக பெங்களூரு சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து கேட்கப்பட்டதற்கு, சசிகலாவின் விடுதலையை அதிமுகவினரும் கொண்டாடுவதாகவே நான் கருதுகிறேன் என தெரிவித்தார்.