1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (19:14 IST)

ரயில் தடம்புரண்டு விபத்து....

Kanchipuram
காஞ்சிரபும் பழைய ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழைய ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் புகுந்தது.

அந்தச் சரக்கு ரயில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது சேதம் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வழியாக ரயில் வந்ததை அடுத்து, தண்டவாளத்தை கடக்கும் பதை மூடப்பட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.