''இதை சரிசெய்யவில்லை என்றால் மிகப்பெரிய விபத்து ...'' ஒடிசா ரயில் விபத்து பற்றி வெளியான தகவல்
ஒடிஷாவில் கடந்த 2 ஆம் தேதி இரவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ரயில்களும் விபத்தில் சிக்கியது. இதில், 275 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பாலாஷோர் ரயில்கள் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1207 பேரில் 1009 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து டிஸ்சார்ஸ் செய்துவிட்டதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவரது உடல்நிலை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து ஏற்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே பெரும் ஆபத்தை விளைவிக்கும் ஒரு சிக்னல் கோளாறு உள்ளதாக தென்மேற்கு ரயில்வேயின் மேலாளர் ரயில்வே அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
அந்தக் கடிதத்தில், இந்தக் கோளாறு சரிசெய்யவில்லை என்றால் மிகப்பெரிய விபத்து நடைபெறும் என எச்சரித்தது உள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒரு சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட இருந்த நிலையில் ரயிலின் ஓட்டுனர் கடைசி நிமிடத்தில் துரிதமாக செயல்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.