வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 ஜூன் 2023 (21:05 IST)

''ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு காசோலை, வேலை''- முதல்வர் அறிவிப்பு

ஒடிஷாவில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி இரவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ரயில்களும் விபத்தில் சிக்கியது. இதில்,  275 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றனர்.

ரயில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு பிரதமர் மோடி, ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வித்துறை தர்மேந்திர பிரதான், மேற்கு வங்க  முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கள் உள்ளிட்ட பலரும்  நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,   ‘’ஓடிஷா மாநிலம் கட்டாக் மற்றும் புவனேஷ்வர்  நகரங்களுக்கு நான் மீண்டும் செல்வேன்.

ஒடிஷா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இழப்பீடு தொகைக்கான காசோலைகளை கடிதம்   மற்றும் வேலைக்கான  கடிதம் ஆகியவற்றை நாளை மறுநாள் ( புதன் கிழமை)  நாங்கள் ஒப்படைப்போம்’’ என்று தெரிவித்தார்.

‘இந்தச் சம்பவத்தில் சிபிசி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ரயில்வே வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு முதல்வர்  கூறியதாவது: ‘’உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உண்மையை தடுப்பதற்கான நேரம் இதுவன்று’’ என்று கூறியுள்ளார்.