தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் 5ஜி சேவையை தொடங்கியது ஏர்டெல்: புதிய சிம் வாங்க வேண்டுமா?
- சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?
- அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
- மீண்டும் விலை உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய சென்னை நிலவரம்
- சென்னையில் அதிகாலை முதல் கனமழை: 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தகவல்!
நெருங்கும் தீபாவளி... சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!!
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 24 ஆம் தேதி தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
அக்டோபர் 11 ஆம் தேதி முதல் அக்டோபர் 25 ஆம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை தீவுத்திடலில் 55 பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை தியாகராயர் நகரில் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 24 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் தியாகராயர் நகர் பகுதிக்கு வர உள்ளதால் இந்த போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் தியாகராயர் சாலை, தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து பனகல் பூங்கா நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Edited By: Sugapriya Prakash
