திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 அக்டோபர் 2022 (08:08 IST)

சென்னையில் 5ஜி சேவையை தொடங்கியது ஏர்டெல்: புதிய சிம் வாங்க வேண்டுமா?

5G service
சென்னையில் நேற்று முதல் 5ஜி சேவை தொடங்கப்பட்ட ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது
 
நேற்று முன்தினம் ஜியோ நிறுவனம் டெல்லி உள்ளிட்ட நான்கு நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியதாக அறிவித்த நிலையில் சென்னை உள்பட 8 நகரங்களில் 5ஜி தொடங்கியுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது 
 
ஏற்கனவே பயன்படுத்தும் சிம்மில் 5ஜி சேவையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் 5ஜி சேவைக்காக தனியாக சிம் வாங்க தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் 5ஜி சேவையைப் பெறுவதற்கு 5ஜி சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தற்போது 5ஜி சேவைக்காக கூடுதல் கட்டணம் பெற போவதில்லை என்றும் கூடுதல் கட்டணம் குறித்த அறிவிப்பு சில மாதங்கள் கழித்து வெளியாகும் என்றும் கேட்டறிந்தார் 
 
4ஜி சேவையை விட 30 முதல் 40 சதவீத அதிவேக இன்டர்நெட் வசதியான 5ஜி  சேவையை தற்போது சென்னை மக்கள் அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva