செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 18 ஜூலை 2021 (14:02 IST)

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? டி.ஆர் பாலு தகவல்

நாடாளுமன்றத்தில் மேகதாது அணை பிரச்சனை பற்றி கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வரும் என தெரிவித்தார் டி.ஆர்.பாலு. 

 
நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்றன.
 
இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். அதில் அவர், 13 பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளோம் என்றும் மேகதாது அணை பிரச்சனை பற்றி கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வரும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் 19 நாள் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.