வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 18 ஜூலை 2021 (11:59 IST)

சீரியலுக்கு வந்த பிக்பாஸ் அனிதா: எந்த சீரியலில் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் யூடியூப் சேனலில் தனது கணவருடன் இணைந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோக்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். 
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சன் டிவியில் செய்தி வாசிப்பதை நிறுத்தி விட்டார். இருப்பினும் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் அவர் சமீபத்தில் கலந்து கொண்டார் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சில்லுனு ஒரு காதல்’ என்ற சீரியலில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க அனிதா சம்பத் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அவரது காட்சி எபிசோடு ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இதேபோல் விஜய் டிவியிலும் அவர் சீரியலில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.