வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (21:53 IST)

ஒரு ஊரே பாஜகவில் இணைந்தது: ஆச்சரிய புகைப்படம்!

ஒரு ஊரே பாஜகவில் இணைந்தது: ஆச்சரிய புகைப்படம்!
தமிழகத்தில் பாஜக நோட்டாவுக்கு போட்டியாக ஒரு காலத்தில் இருந்த நிலையில் தற்போது தனிப் பெரும் கட்சியாக வளர்ந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
குறிப்பாக அண்ணாமலை தமிழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற உடன் இளைஞர்கள் அதிக அளவில் அந்த கட்சிகள் சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு ஊரில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாஜகவில் சேர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மொடக்குறிச்சி ஒன்றியம் வடுகப்பட்டி பேரூராட்சியில் உள்ள ஒரு ஊரில் உள்ள அனைத்து பொதுமக்களும் பாஜகவில் இணைந்து உள்ளனர். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருவது ஒரு பக்கம் ஆபத்து என திமுக உள்பட ஒருசில கட்சிகள் கூறி வந்தாலும் அக்கட்சி வளர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதே ரீதியில் சென்றால் ஒரு நேரத்தில் பாஜக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது