1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tomorrow mega medical camp caontains in Chennai

நாளை சென்னையில் அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம்!

Tamilnadu
நாளை சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பெய்துள்ள கனமழையால் பல பகுதிகளில் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து சென்னையில் மழை பெய்து வருவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் எழுந்துள்ளது.

இதனால் நாளை சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார்டு வாரியாக மக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு தேவையான மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்திய தடை நீட்டிப்பு!