1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 மார்ச் 2021 (22:17 IST)

வேட்புமனு தாக்கல் செய்ய டூவீலரை தள்ளிக்கொண்டு வந்த மநீக வேட்பாளர்!

டூவீலரை தள்ளிக்கொண்டு வந்த மநீக வேட்பாளர்!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் டூவீலரை தள்ளி கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மக்கள் நீதி மய்யம் சார்பாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுபவர் முகமது ஹசீப். இவர் பெட்ரோல் உயர்வை கண்டித்து தனது இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்கடங்காத அளவில் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் இதனை கண்டிக்கும் வகையில் தனது இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்ததாகவும் இதே ரீதியில் பெட்ரோல் நிலை உயர்ந்து கொண்டே சென்றால் யாரும் டூவீலரை ஓட்ட முடியாது என்றும் தள்ளிக்கொண்டு தான் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகத்தான் தான் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் கூறியுள்ளார், இதனால் சில மணி நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.