செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 மே 2020 (18:49 IST)

திருமழிசை மார்க்கெட்டை ஆய்வு செய்யும் முதல்வர், துணை முதல்வர்

சென்னையின் காய்கறி மற்றும் பழச் சந்தைகளாக இருந்த கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும், அவர்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் இருந்ததாகவும், அதன் காரணமாக சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கொரோனா தொற்றின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததாகவும் அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில்  சென்னையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் இதில் பெரும்பாலும் கோயம்பேடில் தொடர்புடையவர்கள் என்ற அதிர்ச்சித்தகவல் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு பதிலாக திருமழிசையில் புதிய காய்கறி சந்தை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் திருமழிசையில் அமைய உள்ள காய்மறி சந்தையை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை ஆய்வு செய்ய இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிக்கையை தற்போது பார்ப்போம்