1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Death count increases in Chennai due to corona

சென்னையில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: பீதில் அரசு!!

CoronaVirus
கொரோனாவால் சென்னையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சென்னையில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்நிலையில் தற்போது சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ராயபுரத்தில் மிக அதிகமான பாதிப்புகள் இருந்த நிலையில் தற்போது ராயபுரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு கோடம்பாக்கம் மற்றும் திருவிக நகர் முன்னேறி உள்ளது என்பது வருத்தத்துக்குரிய செய்தியாக உள்ளது. 
 
சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு கோயம்பேடு பரவால் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் விஷயமாக சென்னையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் கோயம்பேடு சந்தை வியாபாரி உள்பட 4 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னையில் கொரோனாவால் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
டிரம்ப் உதவியாளருக்கு கொரோனா: வெள்ளை மாளிகையில் பதட்டம்