1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tomato price increase again in Chennai

மீண்டும் உயரத் தொடங்கிய தக்காளி விலை! – இன்றைய விலை நிலவரம்!

Tamilnadu
சமீபத்தில் தக்காளி திடீர் விலை உயர்வை சந்தித்து பின்னர் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக கடும் மழை மற்றும் தக்காளி வரத்து குறைவு ஆகிய காரணங்களால் தமிழகத்தில் தக்காளி கடும் விலை உயர்வை சந்தித்தது. இதனால் கிலோ ரூ.150 வரை விலை உயர்ந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் விலையும் குறைய தொடங்கியது.

முன்னதாக சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.35க்கு விற்கப்பட்டு வந்தது. நேற்று சற்று விலை அதிகரித்து கிலோ ரூ.50 முதல் ரூ.60க்குள் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை சற்று அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி கிலோ தக்காளி ரூ.75 முதல் 85க்குள் விற்பனையாகி வருகிறது. எனினும் அடுத்தடுத்த நாட்களில் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஒமிக்ரான்: பயணத் தடையை நீக்க தென்னாப்பிரிக்கா வலியுறுத்தல்