உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான்; கனடாவிலும் 2 பேர் பாதிப்பு! – பரவியது எப்படி?
உலக நாடுகள் சிலவற்றில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் தற்போது கனடாவிலும் இருவருக்கு உறுதியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்னும் புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நிலையில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதன் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன. இது உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
பல நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது முதன்முறையாக கனடாவில் இருவருக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட இருவரும் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இருந்து கனடா வந்தவர்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.