செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:30 IST)

அதிருப்தியில் வாகன ஓட்டிகள் - சுங்கக் கட்டணம் உயர்வு

விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் ரூ.5 முதல் ரூ.35 வரை உயர்ந்துள்ளது. 
 
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் திடீரென தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. 
 
ஆம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் ரூ.5 முதல் ரூ.35 வரை உயர்ந்துள்ளது. ஒரு முறை செல்லும் இலகுரக வாகனங்களுக்கு ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.55 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
 
அதோடு ஒரே நாளில் பலமுறை செல்லும் இலகுரக வாகனங்களுக்கு ரூ.80 அக கட்டணம் வசூலிக்கப்படுவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.