ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:28 IST)

முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு நேரடி மனுக்கள் தர வேண்டாம் – தலைமை செயலகம் அறிவிப்பு!

தமிழக தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு நேரடியாக மக்கள் மனு தர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

தமிழக தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் தனிப்பிரிவில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கோரிக்கை மனுக்களை நாள்தோறும் நேரில் சென்று அளித்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் அபாயம் உள்ள சூழலில் மக்கள் நேரில் வந்து மனு தர வேண்டாம் என தலைமை செயலகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமை செயலகம் விடுத்துள்ள அறிவிப்பில் கொரோனா பரவல் அபாயமுள்ள காரணத்தால் பொதுமக்கள் நேரில் மனு அளிப்பதை தவிர்த்து www.cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்கள் மனுக்களை ஆன்லைனில் அளிக்கலாம் மற்றும் மனுவின் மீதான செயல்பாட்டையும் கண்காணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.