1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (08:50 IST)

தமிழ் இலக்கியங்களுக்கு “திராவிட களஞ்சியம்”னு பேரா? – சீமான் கண்டனம்!

தமிழ் இலக்கியங்களை தொகுத்து அதற்கு திராவிட களஞ்சியம் என பெயர் சூட்டுவதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பழந்தமிழ் இலக்கியங்கள், நூல்களை “திராவிட களஞ்சியம்” என்ற பெயரில் தொகுக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “தமிழர்களின் அறிவுக்கொடையான பண்டைய இலக்கியங்களை ”திராவிட களஞ்சியம்” என பெயர் மாற்ற முயல்வது திமுக அரசின் தமிழர்களுக்கு எதிரான செயலாகும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், பண்டைய தமிழ் இலக்கியங்கள் நூல்களை தொகுத்து அவற்றிற்கு “தமிழ் களஞ்சியம்” என்றே பெயரிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.