1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:43 IST)

ஓடிடி படங்களுக்கு தியேட்டர் தர மாட்டோம்! – திரையரங்க உரிமையாளர்கள் கறார்!

தமிழ்நாட்டு திரையரங்குகளில் ஓடிடியில் வெளியான படங்களை திரையிட முடியாது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் பல படங்கள் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டதால் ஓடிடியில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் சிலவற்றை திரையரங்குகளில் திரையிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ள தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ஓடிடியில் வெளியான படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படாது என தெரிவித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் வெளியாகும் படங்களும் 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.